ஓர் சூர்யஸ்தமமுடன் நான்
கிழிந்த விண்திரையின் வழியே
பிதுங்கி வெளியேறும் ஒளிக்கீற்று,
ஆர்ப்பரத்திக் கொண்டு செவ்வானத்தில்
அழகாய் வண்ணத்திரைப்போல் காட்சி!
எங்கே செல்கிறோம் என்ற வினா,
மனதின் உள்ளே!
அகம் திறந்தால், விடை திரையில்!
“சென்று வருகிறேன்” என்று விடை பெறும்
தலைவனைப் போல் உருகி மருகித் தவிக்கும்
சூரியன்.
“வந்து விடுவாய் அல்லவா நாளையும்” என்ற
ஏக்கத்துடன் வழியனுப்பும் தாயைப் போல்
இந்த மாலைப்பொழுது!
“நீ வந்தால் மட்டுமே நான் எழுவேன்” என்ற
பிடிவாதத்துடன் நீண்டத் துயில் உறங்கச் செல்லும்
தலைவியாய் அந்த காலைப்பொழுது!
இந்த முக்கோண மர்மக் காதலினை
புரிந்து கொள்ள இயலாமுலும்,
ரசித்து கொள்ள இயலாமுலும்,
தினம் தினம் மாறடித்து கொண்டு இருக்கிறோம்,
இந்த சுந்தர வாழ்க்கையை,
மனிதர்களாய்!
மூடர்களாய்!
- ஓர் சூர்யஸ்தமமுடன் நான்
Comments